திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் OLX செயலி மூலம் பழைய மொபைல் போனை வாங்கிவிட்டு, பணம் கொடுக்காமல் நைசாக நழுவிய நபரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. முகமது அசாருதீன் என்பவரின் மொபைல் போனை 44 ஆயிரம் ரூபாய்க்கு வாங்குவதாக கூறி அவரை ஒரு டீக்கடையில் அமர வைத்துவிட்டு தப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.