சென்னை தாம்பரம் அடுத்து சித்தாலப்பாக்கம் அரசு பள்ளியில் நான்கு மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மைதானத்தில் விளையாடி விட்டு வகுப்பறைக்கு சென்ற அவர்கள், அதிக அளவில் தண்ணீர் பருகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட மாணவிகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.