நாமக்கல் மாவட்டம் நாகராஜபுரத்தில் தனியார் மருத்துவமனையின் கட்டடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் கிரைன் ஆப்ரேட்டர், பெயிண்டிங் காண்ட்ராக்டர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். வெள்ளிக்கிழமை பெயிண்ட் அடிக்கும் பணியின் போது கிரைன் சரிந்து மின்கம்பத்தில் விழுந்ததில் மூவர் பலியாயினர். இச்சம்பவத்தில் கிரைன் ஆப்ரேட்டர் விசேந்தி மைக்கேல் ஜூட், பெயிண்டிங் காண்ட்ராக்டர் தனபால், கிரைன் உரிமையாளர் ராஜமாணிக்கம், மருத்துவமனை கணக்காளர் சரண் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.