கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் 300 சதவீதம் வரை லாபம் ஈட்டலாம் எனக் கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட இருவர் உட்பட நால்வரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர். லாஸ்பேட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர், 98 லட்சம் முதலீடு செய்து ஏமாந்ததாக அளித்த புகாரில், பாபு (எ) சையது உஸ்மான், இம்ரான் பாஷா, நித்தீஷ்குமார் ஜெயின், அரவிந்த்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 2021ல் கோவையில் நடிகை தமன்னாவை வைத்து துவக்க விழா நடத்திய கும்பல், 3 மாதங்களுக்கு பிறகு மகாபலிபுரம் சொகுசு ஓட்டலில் 100 பேருக்கு முதலீடு செய்த பணத்தை பொறுத்து நடிகை காஜல் அகர்வாலை வைத்து கார்களை பரிசளித்ததும், மும்பையில் கப்பலில் விழா நடத்தி Hashpe எனும் போலி இணையதளத்தில் முதலீடுகளை பெற்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.