வாங்கிய கடனை திருப்பித் தராமல் இருப்பதற்காக சொந்த அக்காவையே கொலை செய்த தம்பி உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் நாராயணவலசு பகுதியை சேர்ந்த சுதாவை கொன்ற அவரது தம்பி மணிகண்டன், ஏமப்பள்ளி கிராமம் பெரிய கொல்லப்பாளையம் பழைய குவாரி குட்டையில் உடலை வீசினார்.