சென்னை மேடவாக்கத்தில், டாஸ்மாக் கடையில் முதலமைச்சர் படத்தை ஓட்டிய வழக்கில் போலீசார் 4 பேரை கைது செய்த போது பாஜக நிர்வாகி ஒருவர் வேன் முன் படுத்துக்கொண்டு வேனை இயக்கவிடாமல் தடுக்க போலீசார் அவரது சட்டையைக் கிழித்து அவரை வெளியே தூக்கினர். மேடவாக்கம் கூட்ரோடு பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடையில் முதலமைச்சரின் படத்தை மாட்டியும், போஸ்டர் மூலம் ஒட்டியும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் மாலா செல்வகுமார் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.