மதுரையில் கடன் பிரச்னை காரணமாக காரில் வழக்கறிஞர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, 4 பேரை போலீசார் கைது செய்தனர். பார்த்திபனூரை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்களான கௌதம், மாரிமுத்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய கவுதம் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.