காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டு திருமண விழாவில் பங்கேற்ற வி.கே.சசிகலாவை வரவேற்பதற்காக வழிநெடுகிலும் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. 2011 முதல் 2016 வரை ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ-வாக இருந்த பெருமாள், ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்து பின்னர் அந்த கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்நிலையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத பெருமாளின் மகன் திருமண வரவேற்பு விழாவுக்காக, வழிநெடுகிலும் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. இவ்விழாவில் வி.கே சசிகலா பங்கேற்தால், அவரை வரவேற்கும் விதமாக அதிமுக கொடிகள் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.