அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் அருகே முன்னாள் எம்எல்ஏ ஜெ.குருவின் சிலை திறப்பு விழாவிற்கு சென்ற அமைச்சர் சிவசங்கரை பாமகவினர் முற்றுகையிட்டு 10 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீடு கோரி முழக்கமிட்டனர்.காடுவெட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பாமக முன்னாள் எம்எல்ஏ ஜெ.குருவின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்றார்.