ரூபாய் 15 லட்சம் திட்ட மதிப்பீட்டில் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பைகாரா பகுதியில் நியாய விலை கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாமன்ற உறுப்பினர் கருப்புசாமி மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகளோடு இணைந்து ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார் இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் துணைவியார் மற்றும் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கு பெற்றனர் முன்னதாக இந்த நிகழ்விற்கு வந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை பழங்காநத்தம் மண்டல பாஜக சார்பில் நிர்வாகிகள் அவருக்கு சார்பு அணிவித்து தங்களது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர் தொடர்ந்து இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அங்கே வருகை தந்திருந்த ஏராளமான பெண்கள் மூதாட்டிகள் குழந்தைகள் என அவர்களிடம் பேசி தனக்கே உரிய பாணியில் மூதாட்டி மற்றும் குழந்தைகளை கொஞ்சியவாறு அவர் வருகை தரும் வேலையில் ஒரு சிலர் அவர் காலில் விழுந்து வணங்க இவ்வாறெல்லாம் செய்யக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் முதல்வர் முக ஸ்டாலின்-க்கு பயம் வந்துவிட்டது . அதிமுகவுடன் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு பெருகி கொண்டிருப்பதை பார்த்து முதல்வரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி மிக வலுவாக உள்ளது. முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகின்ற இபிஎஸ் இருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திராவிட மாடல் என்று அறிவிப்பு கொடுத்து நடத்திக் கொண்டிருக்கக் கூடிய முதலமைச்சரைக் காட்டிலும் பன்மடங்கு சிறந்த நிர்வாகி இபிஎஸ். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கூடியவர் என்கின்ற அடிப்படையில் மக்கள் மத்தியில் ஆதரவை பெற்று இருக்கிறார். பாஜக உடன் கூட்டணி வைத்த போது அவர்கள் சொன்னதை எல்லாம் செய்தார்கள் திமுகவினர். அறிஞர் அண்ணா கொண்டு வந்த இந்தி எதிர்ப்பை பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழகத்தில் இந்தி மொழியை பரப்பியவர்கள் திமுகவினர். அவர்கள் கூட்டணி வைத்தால் அது நட்பு ரீதி என்றும் நாங்கள் கூட்டணி வைத்தால் அடிமை என்றும் அவர்கள் கூறுவதற்கு என்னவென்று சொல்ல தெரியவில்லை முதலமைச்சருக்கு பதட்டம் வந்துவிட்டது. கனிமொழி சிறந்த நிர்வாகி ஆனால் அவர் குறித்து விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை. கருணாநிதியைப் போன்று அதாவது, தன் அப்பாவைப் போல தன்னை எதிர்ப்பவரை குறை கூற கூடியவர் தான் ஸ்டாலின். பட்ஜெட்டை பார்க்கும் போது சிலருக்கு கசக்கும் சிலருக்கு புலிக்கும் சிலருக்கு நெல்லிக்கனி போல மத்திய அரசு பட்ஜெட் மோடி தலைமையில், தமிழகத்தில் சொந்தக்காரர் நிர்மலா சீதாராமன் ஒன்பதாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பது நமது தமிழகத்தை சார்ந்தவர் என்பதில் நமக்கு பெருமை. தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணமாக சேலை அணிந்த பெண்மணியாக நமது நிர்மலா சீதாராமன் உள்ளார். மெட்ரோ ரயில் குறித்து மக்கள் மத்தியில் புரிதல் இல்லை. மத்திய அரசு கொடுக்க மறுக்கவில்லை ஆனால் தமிழக அரசு முறையான ஒரு வழிகாட்டு முறையை பின்பற்றவில்லை. சரியான விளக்கம் கொடுக்கவில்லை என்கின்ற காரணத்தினால் தான் மத்திய அரசிலிருந்து கேட்டு கடிதம் அனுப்பி இருந்து மத்திய அரசு புறக்கணிப்பு என்று பரப்பி வருகிறார்கள். செங்கோட்டையன் செல்லாக்காசு அவருடைய பேச்சை எல்லாம் பெரிதாக பேச தேவையில்லை. யாருமே ஏற்றுக் கொள்ளாத நிலையில் தற்போது எங்களிடமிருந்து அங்கு போய் இருக்கிறார். போகிற போக்கில் ஏதாவது அவர் பேசுகிறார்.எனவே செங்கோட்டையன் குறித்து பேச வேண்டாம். தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் நடைபெற்ற போது செங்கோட்டையன் எங்கு இருந்தார். செங்கோட்டையன் குறித்து செல்லூர் ராஜு சாடல் என்று பதிவு செய்து விடுவீர்கள். அதனால் அதைப் பற்றி பேச வேண்டாம். திருவிழாவில் காணாமல் போனவர்கள் பற்றி பேச வேண்டாம். எடப்பாடியார் தான் முதல்வராக வரவேண்டும் என்கின்ற ஒரு நிலையில் மக்கள் உள்ளார்கள். இது போன்ற போதை கலாச்சாரம் மிக்க ஒரு தமிழகத்தை நாங்கள் பார்க்கவே இல்லை என சினிமா படத்தில் வரக்கூடிய வசனம் போல மக்கள் உணருகிறார்கள் என்று (தனக்கே உரிய பாணியில்). விஜய் செய்தியாளர்களை சந்தித்து விட்டால் அது பெரிய சாதனை. செய்தியாளர்களை சந்தித்து குறிப்பாக ஊடகவியலாளர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டால் அதுவே ஒரு சாதனை. இங்கிருந்து போன செல்லா காசுகளை கூறச் சொல்லுங்கள் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும். Related Link சிகிச்சை அளிக்க முடியாமல் சிறுவன் பலி என போராட்டம்