கல்விக்கு நிதி கொடுக்கவில்லை என உடனே மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தாமல், திமுக அரசு தமிழ்நாட்டில் கோலப்போட்டி நடத்துவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரை வாடிப்பட்டி அருகே செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களுக்கு ஐந்து மாதமாக 100 நாள் வேலைக்கான சம்பளம் வரவில்லை என குற்றம் சாட்டினார்.