அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சதுரகிரி சுந்தர மகாலிங்கசாமி கோவிலில் நள்ளிரவில் தியானம் செய்து சிறப்பு பூஜையில் ஈடுபட்டார். இக்கோவிலில் நள்ளிரவில் சிறப்பு பூஜை செய்து தியானத்தில் ஈடுபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம். இதனடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டியும் சிறப்பு பூஜையில் ஈடுபட்டார். இதையும் படியுங்கள் : மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் பிரசவம்... அவசரகால மருத்துவ உதவியாளர், ஓட்டுநருக்கு பாராட்டு