திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் ஆட்சியில் கோயில்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் குற்றம்சாட்டினார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நாள் தோறும் 400 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.