தனக்கு திருமணம் ஆனதை அறிந்தும், தன்னை சந்திக்க வேண்டும் என தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்ததாக முன்னாள் காதலனை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயிலை சேர்ந்த தருண்குமார் என்பவர், இன்ஸ்டாகிராம் மூலமாக சுபஸ்ரீ என்பவருடன் பழகி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு இருவரும் ஊட்டி சென்றதை அறிந்த பெண்ணின் தந்தை, போலீசில் அளித்த புகாரின்பேரில் தருண்குமார் போக்சோவில் கைது செய்யப்பட்டார். தற்போது 19 வயதான சுபஸ்ரீக்கு வேறொவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், ஜாமீனில் வெளியே வந்த அவரது முன்னாள் காதலன் தருண்குமார், அவரை சந்திக்க வேண்டும் என தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுபஸ்ரீ,அவரை கொல்ல முயற்சித்துள்ளார்.