ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் குழந்தைகளை படிக்க வைக்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். இதற்கான போட்டித்தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வுகளுக்கு குழந்தைகளை தயார்படுத்த வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர், கம்யூனிகேஷன் ஸ்கில்லை வளர்க்க ஆங்கில கல்வியை நன்றாக கற்க வேண்டும் என கூறினார்.