234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக, தற்போது தேர்தலை சந்திக்கவே முடியாத லாயக்கற்ற தலைமையிடம் இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். விமர்சித்துள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒற்றைத் தலைமை வந்ததற்கு பிறகு 11 தேர்தலை சந்தித்தும், அனைத்திலும் இபிஎஸ் தோல்வியடைந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.