தளவாய் சுந்தரத்தை அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்தது தவறு என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் உள்ளவர்கள் பிற அமைப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்று சட்டம் எதுவும் இல்லை என கூறினார்.