நெல்லை மாவட்டம் கொக்கிரகுளத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அதிமுகவினர் இரு தரப்புக்கு இடையே மோதிக்கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒரு தரப்பினர் மாலை அணிவித்துவிட்டு கீழே இறங்கியபோது மாநில சிறுபான்மையினர் பிரிவு நிர்வாகிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் தகாதவார்த்தைகளால் திட்டிக்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.