தமிழகத்தில் மக்களாட்சி மறைந்து மன்னராட்சி வளர்ந்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சாதனை குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகித்து பேசிய அவர், தமிழகத்தை பேராபத்து சூழ்ந்து கொண்டிருப்பதாகவும், ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களாட்சி மலர வேண்டும் எனவும் கூறினார்.