நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே காட்டு யானைக்கு பயந்து வனத்துறை ஊழியர் ஓடியதன் வீடியோ வெளியாகி உள்ளது. சாமியார் மலை பகுதியில் உள்ள தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட, வனத்துறை ஊழியர் முயன்றார். அப்போது, அவரை நோக்கி காட்டு யானை முன்னேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.