திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மக்கள், தங்கள் மீது கரிசனம் காட்ட வேண்டும் என முதலமைச்சருக்கு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அரசின் கருணையை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர்.