காப்புக் காட்டு பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டருக்கு மேல் வரும் காட்டுப் பன்றிகளை வனத்துறை அதிகாரிகள் சுடலாம் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தலைமை வன பாதுகாப்பாளர் மற்றும் வன உயிரி காப்பாளர் தலைமையிலான குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் அரசாணை வெளியிட்டுள்ளதாக கூறியவர், காட்டு பன்றிகளை விவசாயிகளும் சுட அனுமதி வழங்குவது குறித்து பரிசீலித்து வருதாக தெரிவித்தார்.