மத்திய அரசு மத வெறியை தூண்டுவதாகவும், இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் எல்லாம் தீண்டப்படாதவர்கள் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குவதாகவும் அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டினார். விழுப்புரம் மாவட்ட மந்தக்கரை பகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் பொன்முடி, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் அனைவரும் இந்த மண்ணின் மைந்தர்கள் தான் என்றும் இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் தான் என்றும் தெரிவித்தார்.