திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட்ட கரடி, வனத்துறையினரை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வெலக்கல்நத்தம் அருகே செத்தமலை காப்பு காட்டில் இருந்து இரு குட்டிகளுடன் தாய் கரடி விவசாய நிலத்திற்குள் புகுந்து இரு பெண்களை தாக்கியது. இதனையடுத்து, இரு குட்டிகளையும் பிடித்து வனப்பகுதிக்குள் விட்ட நிலையில், தாய் கரடி பிடிபடாமல் தப்பி ஓடி வீட்டில் உள்ள சுவற்றின் மீது ஏறி குதித்ததில் அதன் வாயில் காயம் ஏற்பட்டது. இதனால், அங்குள்ள பூச்செடிக்குள் தஞ்சம் அடைந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பொதுமக்கள் உதவியுடன் போராடி பிடித்தனர்.