திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தை தவெக மாவட்ட செயலாளர் விஜயகுமார் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தவெக தலைமையின் அறிவுறுத்தலை அடுத்து, பாதிக்கப்பட்ட மேல்பாக்கம் கிராம மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதாக தெரிவித்தார். மேலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு வீடு கட்டி தருவது குறித்து தலைமை நிர்வாகத்திடம் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.