கோவை விமான நிலையத்தில், உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட லேப்-டாப், மைக்ரோபோன், ட்ரோன் மற்றும் சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை சோதனை மேற்கொண்டனர். அப்போது, சிங்கப்பூரில் இருந்து வந்த இண்டிகோ விமானம், சார்ஜாவில் இருந்து வந்த ஏர்-அரேபியா விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்தனர். அப்போது 1256 லைட் சிகரெட், 115 புனி சிகரெட், 280 இ-சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 13 லேப்டாப், 12 ட்ரோன் கேமரா, 20 மைக்ரோபோன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை எடுத்து வந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ், விக்னேஷ், புதுச்சேரியை சேர்ந்த அப்துல் அஹமத், நாகப்பட்டினத்தை சேர்ந்த ரவி, அப்துல் காதர், திருச்சியை சேர்ந்த ஐயப்பன், கடலூர் பகுதியை சேர்ந்த பிரம்மா ஆகிய ஏழு பேரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.