திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வெளிநாட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து ருத்ர பாராயணம் பாடலை பாடி வழிபாடு நடத்தினர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளை சேர்ந்த 110 பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை புரிந்து, சம்பந்த விநாயகர் சந்நிதி, அண்ணாமலையார் சந்நிதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சந்நிதி உள்ளிட்ட பல்வேறு பிரகாரங்களில் வழிபட்டனர்.இதையும் படியுங்கள் : விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜை 2,007 பெண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்