புதுக்கோட்டையில் முதல் முறையாக அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரின் நால்வர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், குழந்தைகள் 63 நாயன்மார்களின் வேடமணிந்தும், 208 அடியார்கள் பன்னிரு திருமுறை நூல்களை தலையில் சுமந்தும் கைலாய வாத்திய இசை முழங்க சாந்தாரம்மன் கோவில் வளாகத்திலிருந்து புறப்பட்டு ஹர ஹர சங்கர சிவ சிவ சங்கர கோஷத்துடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின் முன்பாக பெண்கள் மற்றும் சிறுமிகள் கோலாட்டம் ஆட, சாலையின் இருபுறமும் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.