விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உணவு டெலிவரி ஊழியர் சாலையில் விழுந்த உணவை டெலிவரி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரக்காணம் பகுதியை சேர்ந்த திமுக கவுன்சிலர் ராம்குமார் மகன் கிரி என்பவர் ஸ்விகி செயலி மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். இதனை சிவசங்கர் என்ற நபர் டெலிவரி செய்தபோது உள்ளிருக்கும் உணவு பொருட்கள் சேதமடைந்தும் , சேரும் சகதியுமாக இருந்துள்ளது. இது குறித்து கிரி கேட்டபோது சிவசங்கர் தகாத வார்த்தையில் திட்டியதாக கூறி வீடியோ வெளியிட்டு புகார் தெரிவித்துள்ளார்.