சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கின. சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே மேற்கொள்ளப்பட்டு வந்த 4 ஆவது வழித்தட பணிகள் காரணமாக கடந்தாண்டு ஆகஸ்ட் 27ம் தேதி முதல் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவை, பகுதியாக ரத்து செய்யப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே இயக்கப்பட்டது. பணிகள் நிறைவு பெற்றதால், வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்த நிலையில், 14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பறக்கும் ரயில் சேவை தொடங்கியது. இருமார்க்கத்திலும் தலா 45 ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் சென்னை பூங்கா புறநகர் ரயில் நிலையங்களில் பறக்கும் ரயில்கள் நிற்காது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.