சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கிலோ 1100 ரூபாய்க்கு விற்பனையான பிச்சிப்பூ 1600 ரூபாயாகவும், மல்லிகைப்பூ கிலோ 600 ரூபாயில் இருந்து 800 ரூபாயாகவும் விலை உயர்ந்து விற்பனையாகிறது. அரளிப்பூ கிலோ 190 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ 200 ரூபாய்க்கும், முல்லைப் பூ கிலோ 800 ரூபாய்க்கும், செவ்வந்தி கிலோ 400 ரூபாய்க்கும், ரோஸ் கிலோ 220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.