புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாவை ஒட்டி பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும், பல்லக்கில் பூக்களை கொண்டு வந்தும் அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபாடு நடத்தினர். முன்னதாக பால்குடம் மற்றும் கரும்பு தொட்டிலை சுமந்து வந்தும் அலகு குத்தியும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.