திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உபக்கோவிலான ஆதி மாரியம்மன் கோயிலில் மாசிமாத தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா தொடங்கியது. சமயபுரம், மருதூர், மாகாளிகுடி, வி.துறையூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மேளதாளம் முழங்க பூத்தட்டுகளை சுமந்து தேரோடும் வீதி வழியாக சுற்றி வந்த பக்தர்கள் அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.