news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி
tv

Also Watch

tv

Read this

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி

உதகை, நீலகிரி

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தாவரவியல் பூங்கா

தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி : 

இந்த ஆண்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உலக புகழ் பெற்ற 128வது மலர்கண்காட்சி கடந்த நான்கு நாட்களுக்கு முன் துவங்கியது.

இந்த ஆண்டு நடைபெறும் மலர் கண்காட்சியின் சிறப்பம்சமாக பூங்காவிற்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் வகையில் வண்ண கொய்மலர்கள், கிரைசந்திமம், ரோஜா உள்ளிட்ட 7 லட்சம் மலர்களைக் கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பிரம்மாண்டமான நுழைவு வாயில்.

மகாபலிபுரம் கோவில், திருவாரூர் தேர், திருவள்ளுவர் சிலை, தமிழக வரைபடம், தமிழர்களின் பண்பாடு உள்ளிட்ட 26 மலர் அலங்கார வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதே போல் 50,000 மலர் தொட்டிகளில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக மலர் மாடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் பூங்கா முழுவதும் 275 ரகங்களில் 10 லட்சம் மலர் செடிகளில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள் பூங்கா முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் வெகுவாக கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 18ம் தேதி துவங்கிய 28 வது மலர் கண்காட்சியை கடந்த நான்கு நாட்கள் மற்றும் இன்று மாலை 1 மணி வரை 1 லட்சத்து 67 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து சென்றுள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி

கடந்த 18 ம் தேதி 19462 பேர்
19ம் தேதி ஆம் - 18550 பேரும்,
20ம் தேதி - 18575 பேரும்,
21ம் தேதி - 19680 பேரும்,
22ம் தேதி - 20595 பேரும்,
23ம் தேதி - 9838 இன்று (1.00) மணி வரை

மொத்தம் 1 லட்சத்து 67 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்ட ரசித்து சென்று உள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவிப்பு.

Related Link
பெருங்குடி அப்போலோ மருத்துவமனையில் மின்தடை

பெருங்குடி அப்போலோ மருத்துவமனையில் மின்தடை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

4000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?

0
3 hrs 30 mins agoshare
Minister vignesh








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved