விருதுநகர் ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் பெண்கள் தீச்சட்டி எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர். ஸ்ரீவில்லிப்புத்தூர் மெயின் ரோடு பகுதியில் உள்ள 200 ஆண்டு பழையமையான ஸ்ரீ பெரிய முத்துமாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 18 ஆம் தேதி தொடங்கிய நிலையில், 12 நாட்கள் விரமிருந்த பெண்கள் தீச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.