ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மூன்றாவது நாளாக வெள்ளம் வடியாததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். வி.சேதுராஜபுரம், முத்துராமலிங்கபுரம், வாளம்பட்டி, செவல்பட்டி, டி.கரிசல்குளம், உள்ளிட்ட கிராமங்களை காற்றாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வெள்ளம் சூழ்ந்தது. மூன்று நாட்களாக வெள்ளம் வடியாத நிலையில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் அவசர தேவைக்கு கூட வெளியே செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.