ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பாரதி நகரில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்குவதால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கும் மக்கள், ஆண்டுதோறும் இதே நிலைதான் நீடிப்பதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.