புதுக்கோட்டை நகர் பகுதியில் வெளுத்து வாங்கி கனமழையால், சாலைகளில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. ஆர்ப்பரித்து ஓடிய வெள்ளநீரில் , பயணிகளுடன் சிக்கிய ஷேர் ஆட்டோ மீட்கப்பட்ட நிலையில், வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.