ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தமிழக வெற்றி கழகத்தினர் ஈடுபட்டனர். கனமழை காரணமாக மண்டபம் பகுதியில் வெள்ளம் புகுந்துள்ள நிலையில் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தவெகவினர் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.