ஈரோடு மாவட்டம் பெரிய கொடிவேரி ஜோகியூர் தரைபாலத்தை வெள்ளம் மூழ்கடித்து செல்லும் நிலையில் பாலத்தை இணைக்கும் சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டது. பெரும்பள்ளம் அணை நிரம்பி, பெரியகொடிவேரி பேரூராட்சிக்குட்பட்ட ஜோகியூர் தரைபாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதில் தரைபாலத்தில் உள்ள சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் 3 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. பேரூராட்சி நிர்வாகம் விரைந்து பள்ளத்தை சீரமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்