திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இரவு பெய்த மழைக்கு ராஜீவ் காந்தி சிலை சர்வீஸ் சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மாதனூர் ,வடபுதுப்பட்டு, கன்னிகாபுரம் ,சோமலாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு பெய்த கன மழைக்கு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக ராஜீவ் காந்தி சிலை சர்வீஸ் சாலையில், மழைநீர் குளம் போல் தேங்கி நிற்க வாகனங்கள் தேங்கிய நீரில் தத்தளித்தப்படியே சென்றன. இதேபோல் ரெட்டிதோப்பு பகுதியை இணைக்கும் ரயில்வே பாலத்தின் கீழும் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.