மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றுக்குள் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பால பணிகள் 8-வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், அதிகளவு தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை மேய்க்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.