திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே காரணி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால், போலீசார் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை தடை செய்தனர். இந்நிலையில், 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், புதுப்பாளையம் - காரணி இடையே நடைபெற்று வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.