கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி பாலத்திற்கு மேல் நீர் செல்லும் நிலையில் ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஈரியூர் கிராமத்தில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. தரை பாலத்திற்கு மேல் தண்ணீர் சென்று கொண்டுள்ள நிலையில், வாகன ஓட்டிகள் இயக்க முடியாமல் கடும் சிரமப்பட்டு கடந்து சென்று வருகின்றனர்.