தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் மூல வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளிமலை, அரசரடி, பொம்மராஜபுரம், மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து தண்ணீர் ஓடுகிறது. இதனால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.