தேனி மாவட்டம் உப்புக்கோட்டை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத்துடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கம்பம் பள்ளத்தாக்கில் பெய்த கனமழை மற்றும் முல்லை பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், உப்புக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.