எல்லீஸ் அணையின் இரு கரையும் தொட்டு, கரை புரண்டோடும் வெள்ளம் காரணமாக, தென்பெண்ணை கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் எச்சரித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை நிரம்பி 20 ஆயிரம் கன அடி தண்ணீர், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் இருந்து, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அணைக்கட்டு வழியாக ஏனாதிமங்கலம் கிராமத்தில், எல்லீஸ் அணைக்கட்டின் இரு கரையும் தொட்டு, வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தென்பெண்ணை ஆற்றின் வெள்ளநீர் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை கடந்து கடலூரில் உள்ள கடலில் சென்று கலக்கிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் அருகே உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.