மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக, உற்சவர் சன்னதியில், சுப்பிரமணிய சுவாமி - தெய்வானைக்கு பால், சந்தனம், இளநீர், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசாமி தெய்வானையுடன் சிம்மாசனத்தில் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். தங்க முலாம் பூசப்பட்ட கொடி கம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக டிசம்பர் 3 ஆம் தேதி காலை கார்த்திகை தேரோட்டமும், மாலை 6 மணிக்கு மலைமேல் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.