புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள பழமையான புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஆலயத்தின் 70-வது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, புதுச்சேரி - கடலூர் உயர் மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைசாமி கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து, கோவில் பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்ற நிலையில், 6-ம் தேதி முக்கிய நிகழ்ச்சியான பெருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெறுகிறது.