ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகே 15 நாட்களுக்கு முன்பு பைக் மோதியது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக, கூலித்தொழிலாளியை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த கூலித் தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கத்தியால் வெட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.